
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வட மாகாணத்தை சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு திங்கட்கிழமை (08) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,
தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வருகை தரும் வகையில் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும். அதேவேளை, மாணவர்களின் முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)