வட மாகாணத்தில் மன்னாருக்கே முதல் அதிநவீன சத்திர சிகிச்சை  முப்பரிமாண உபகரணம் கையளிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களின் நலன் கருதி வட மாகாணத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் சுமார் 28 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன முப்பரிமாண Laparoscopy உபகரணம் கையளிக்கும் அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சனிக்கிழமை (26.11.2021) காலை நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விஷேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எம் மதுரகீதன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது

இதில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில் நந்தனன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன். மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.செந்தூர்பதிராஜா ஆகியோர் இணைந்து பொது வைத்திய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எம் மதுரகீதன் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி புஸ்பகாந்தன் மற்றும் சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதியர் ஆகியோருடம் நோயாளர்களுக்காக கையளிக்கப்பட்டது.

இச் சத்திரசிகிச்சை உபகரணமானது உடலுக்குள் கமராவை செலுத்தி சத்திரசிகிச்சை செய்யும் ஓர் கருவியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்திர சிகிச்சை செய்யும்போது நோயாளிகளுக்கு காயங்கள் மற்றும் வலி ஏற்படுவது மிக குறைவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நவீன சத்திர சிகிச்சை தொகுதியானது இலங்கையில் ஒருசில வைத்தியசாலைகளிலேயே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் மன்னாருக்கே இது முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் மன்னாருக்கே முதல் அதிநவீன சத்திர சிகிச்சை  முப்பரிமாண உபகரணம் கையளிப்பு

வாஸ் கூஞ்ஞ

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

விலாஸ் வேண்டுமா? Villas

B & B வேண்டுமா? B&B

கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More