
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
லொறி மோதியதால் பலியான யானை
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறியுடன் காட்டு யானையின்று மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (08) அதிகாலை திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய லொறியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடைய பெண் யானை என அடையாளம் காணப்பட்டது. கந்தளாய் லஹபத்த காட்டுப்பகுதியில் வசித்த யானை வீதியை கடக்கும்போது இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் காரியாலய பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஏ.பீ.கே. நந்தசேன தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)