
posted 27th May 2022
மாலைத்தீவு பாராளுமன்ற (மஜ்லிஸ்) சபாநாயகரும், அந் நாட்டு முன்னாள் ஜனாதிபதியும்,மனித உரிமைச் செயற்பாட்டாளருமான முஹம்மத் நஷீட் வார இறுதியில் இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை தலைநகர் கொழும்பில் அவரது இல்லத்தில் சிநேகபூர்வமாகச் சந்தித்து உரையாடினார்.அத்துடன், பின்னர் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்றில் அவருடன் ஏனைய எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரான மனோ கணேசன், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரட்னஆகியோரும் கலந்துகொண்டனர்.பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தியதாகப் பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)