
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரணில் தலைமையில் புதிய கூட்டணி ஜூலை 25இற்கு பின்னர் அறிவிப்பு?
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தலைமையிலான புதிய மெகா கூட்டணியை அறிவிப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாக போட்டியிடுவார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ள நிமல் லான்சா தலைமையிலான எம். பிக்கள் குழு, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தனியாக இயங்கிவரும் சரத் பொன்சேகா, ராஜித சேனாரட்ன, சரத் பொன்சேகா ஆகிய தரப்புகள் தவிர ஐக்கிய மக்கள் சக்தியின் 15 - 20 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளனர்.
இவர்களைத் தவிர, ஆளும் தரப்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டணியில் இணைய உத்தரவாதம் அளித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்து அமைக்கப்படும் புதிய மெகா கூட்டணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்க சந்திப்பார். இதற்கான கூட்டணி எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)