
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரணில் - மகிந்த இரகசிய சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிய வந்துள்ளது.
கொழும்பு விஜயராமையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மூடிய அறைக்குள் நடந்த இந்தச் சந்திப்பு தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எவையும் வெளிவரவில்லை.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய விடயங்கள் பேசப்பட்டன என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)