
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரணிலின் சின்னம் குதிரை?
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொதுச் சின்னமாக குதிரைச் சின்னத்தை தேர்ந்தெடுக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதிக் கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.
யானை, அன்னம் மற்றும் மொட்டு என்பன பொதுச் சின்னமாக இருக்கக்கூடாது என பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் பொதுச் சின்னமாக குதிரைச் சின்னத்தை தேர்ந்தெடுப்பது பற்றி ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்றார். கப்பல் சின்னத்தை ஏற்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பொருளாதாரப் போரில் வெல்வதற்கு குதிரைபோல் வேகமாக பயணிக்கக்கூடிய ஒருவரே தேவை என்ற பிரசாரம் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)