posted 18th October 2021
மனோ கணேசன் எம். பி.
யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம். பி. நேற்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
வலி. வடக்கு பிரதேசத்தின் காங்கேசன்துறை, கொல்லன்கலட்டி பகுதிகளுக்கு சென்ற அவர், கடந்த காலங்களில் தனது நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கட்டடங்களையும் பார்வையிட்டார். அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
அத்துடன், அந்தப் பகுதிகளில் மக்களுடனும் கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகள் - குறைகள் தொடர்பிலும் அறிந்துகொண்டார்.
எஸ் தில்லைநாதன்