
posted 15th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு
யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கயிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியிலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் போது முறைகேடான விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்ட காலமாக விண்ணப்பத்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும், இவை குறித்து மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கையாளர் ஒருவர் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)