யாழ்ப்பாண மறை மாவட்ட நத்தார் நள்ளிரவு திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
யாழ்ப்பாண மறை மாவட்ட நத்தார் நள்ளிரவு திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாண மறை மாவட்டத்துக்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ்ப்பாணம் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.

யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

துயர் பகிர்வோம்

உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.

உலகம் முழுவதும் இன்றைய தினம் நத்தார் பெருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏற்கனவே பல நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாண மறை மாவட்ட நத்தார் நள்ளிரவு திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)