யாழ் ரயிலில் தொடர்ச்சியாக டீசல் திருட்டு அம்பலம். ஊழியர்களும் உடந்தை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ் ரயிலில் தொடர்ச்சியாக டீசல் திருட்டு அம்பலம். ஊழியர்களும் உடந்தை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ரயிலில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், இரவு வேளையில் ரயில் தரித்து நின்றபோது இனந்தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட சமயம், ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்றதை அடுத்து நான்கு 20 லீற்றர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரயில் எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே இருப்பதாகக் கூறப்படும் நிலையில், குறித்த திருட்டுக்கு ரயில் நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார், ரயில் திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

யாழ் ரயிலில் தொடர்ச்சியாக டீசல் திருட்டு அம்பலம். ஊழியர்களும் உடந்தை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)