
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் லயனல் பெர்னாண்டோ காலமானார்
யாழ்ப்பாணத்தின் முன்னாள் அரச அதிபரான லயனல் பெர்னாண்டோ தனது 90ஆவது வயதில் நேற்று முன்தினம் (05) காலமானார்.
1960களில் யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த லயனல் பெர் னாண்டோ அனைத்து தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இலங்கை ரூபவாஹினி தலைவராகவும் பின்னாளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநராகவும் பெர்னாண்டோ பணியாற்றினார்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சை முன்னெடுத்த போது, அந்தப் பேச்சிலும் இவர் பங்கேற்றிருந்தார். பின்னாளில், ஊடகவியலாளராகவும் இராஜதந்திரியாகவும் விளங்கிய அவர், நெதர்லாந்து, பிரான்ஸ் நாடு களின் தூதுவராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)