
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். மாவட்ட பதில் அரச அதிபராக பிரதீபன்
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் 4ஆம் திகதி வியாழக்கிழமை தனது பதவியை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வு நேற்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் வரவேற்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ். சிறீமோகன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)