
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். - சென்னை விமான சேவையை ஆரம்பம்
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டிகோ எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் - சென்னை இடையே தினசரி விமான சேவையை ஆரம்பிக்கிறது.
இலங்கையில் கொழும்புக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடமாக யாழ்ப்பாணத்துக்கான சேவையை இன்டிகோ அறிவித்துள்ளது.
விமானத்துக்கான முன்பதிவு நேற்று முன்தினம் ஆரம்பமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே இன்டிகோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)