
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் கிராம நகரங்களில் விசேட அபிவிருத்தி திட்டம் - பிரதமர் தினேஷ் உறுதி
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உள்ளூராட்சி நிர்வாகத்தில் கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான விசேட ஏற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளோம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்றைய தினம் (12) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தந்தார். இதன்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய பிரதமர்,
வட பகுதி விவசாயிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். விவசாயிகள் அரச துறையில் உள்ளவர்கள் அல்லர். எனினும் அவர்கள் நாட்டுக்கு செய்யும் பெரும் பங்களிப்பை விலை மதிக்க முடியாது என்றும் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)