
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் கடலில் 100 அடி ஆளத்தில் மீன்பிடித்தவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம்
யாழில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சேகுலாப்தின் முஹமட் காபில் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம் (17) காலை நாகர்கோவில் பகுதியில் இருந்து கடல் தொழிலுக்காக சென்றார். கடற்கரையில் 24 கிலோமீட்டர் தூரம் கடலினுள் சென்று நூறு அடி ஆளத்தில், ஒட்சிசன் சிலிண்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் 11 மணியளவில் தண்ணீருக்கு மேலே வந்துள்ளார். பின்னர் பிற்பகல் இரண்டு மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிற்பகல் 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இருப்பினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)