
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து மூதூரில் தடம்புரண்டது
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து தடம்புரண்டதில் 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் சிறுவர் மற்றும் பெண்கள் என்று தெரிய வருகின்றது.
இன்று (19) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
ஆனைக்கோட்டையிலிருந்து இன்று (19) காலை 8 மணியளவில் கதிர்காமத்துக்கு குறித்த பேருந்து பயணித்தது. அதிகளவில் சிறுவர்களும் பெண்களுமே பயணித்திருந்தனர்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு சென்றுவிட்டு, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியூடாக பேருந்து கதிர்காமம் நோக்கி பயணமானது. இதன்போது, மூதூர் - கங்கை பாலத்துக்கு அண்மையாக பேருந்து தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில், 30இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மூதூர் தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)