யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று வெள்ளி (15) பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேச இசை முழங்க அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்களை ஏற்றப்பட்டு, தமிழ்தாய் வாழ்த்து, இசைக்கப்பட்டது. தொடர்ந்து தேசியக் கொடியினை முன்னாள் அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு மருத்துவ அதிகாரியும், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரியுமான வைத்திய கலாநிதி திருமதி. மனோன்மணி சந்திரகுமார் ஏற்றினார். அதனை தொடர்ந்து பாடசாலைக்கொடியினை பதில் அதிபர் திருமதி. பானுமதி ஏற்றிவைக்க கம்பன், பாரதி, வள்ளுவன் ஆகிய இல்லங்களின் கொடிகளும் இல்ல தலைவர்களால் ஏற்றிவைக்கப்பட்டன. தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் சம்பிர்தாயபூர்வமாக விளையாட்டுக்களை ஆரம்பித்துவைத்தார்.

கம்பன், வள்ளுவன், பாரதி ஆகிய இல்லங்களுக்கு இடையில் இடம் பெற்ற போட்டிகளில் பச்சை நிறமான வள்ளுவன் இல்லம் முதலாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை, மஞ்சள் நிறம் கொண்ட பாரதி இல்லமும், சிவப்பு நிறம் கொண்ட கம்பன் இல்லமும் பெற்றுக் கொண்டன.

இதேவேளை பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கான போட்டிகளும் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், கேடயம் என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினரும், அம்பன் பிரதேச மருத்துவ மனையின் முன்னாள் பொறுப்பாதிகாரியும், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவருமான திருமதி மனோன்மணி சந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் க. பிரபாகரன், கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திவங்கி கண்காணிப்பு உத்தியோகத்தர் இ. செந்தூரன், அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் முன்னாளர் அதிபர் சோ. வாகீசன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சி. வரதகுலம், அம்பன் சமாதான நீதவான் ந. பத்தமநாதன், ஓய்வு பெற்ற கிராம சேவகர் திரு. ந. தர்மகுலசிங்கம், கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறிராமசந்திரன் உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்,

இங்கு விசேட விருந்தினராக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் கலந்துகொண்டார்.

இதை வேளை மாணவர்கள் மத்தியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்காக அரச பேருந்து போன்று இல்லம் அமைக்கப்பட்டு விபத்துக்களை தடுப்போம் என எழுதப்பட்டிருந்தமை பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More