
posted 4th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்களை இடித்துத் தள்ளிய ஹையேஸ் வாகனம்
சுன்னாகம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்கின்ற பக்கம் 100 மீற்றர்கள் தூரத்தில், ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்கள் தமது பழக்கத்தினால் சென்றுகொண்டிருந்தவேளை, முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)