
posted 21st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மூளாய் வைத்தியசாலையில் தங்கநகைகள், பணம் திருட்டு
மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்புப் பணியாளர்களின் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் கடமை நேரத்தில், அவர்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறையொன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வழமை போன்று நேற்று முன்தினமும் (19) வெள்ளளிக் கிழமை பணியாளர்கள் தமது உடைமைகள் மற்றும் நகைகளைப் பெட்டகத்தினுள் வைத்து பூட்டிவிட்டு கடமைகளுக்கு சென்றிருந்தனர்.
பணியாளர்கள் கடமை முடிந்து வந்து பார்த்தபோது, பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, பணியாளர்களின் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)