முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் பிரதமர் சந்திப்பு

தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் திங்கள்கிழமை (22.11.2021) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.

அவர் காலஞ்சென்ற இந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவரான அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா சுஹாய்ப் அலீம் அவர்களின் புதல்வராவார்.

மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து இச்சந்திப்பின் போது கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் கௌரவ பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள்இ இந்நாட்டின் மஹாசங்கத்தினர் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்களுடன் வருகைத்தந்திருந்த முஸ்லிம் மதத் தலைவர்களும் கௌரவ பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் பிரதமர் சந்திப்பு

வாஸ் கூஞ்ஞ

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More