முற்றுகையிட்ட.சாணக்கியன்

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது.

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும்அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரியும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திங்கட்கிழமை மாலை மட்டக்கள்பபு கல்லடி பாலத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பியிருந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக திருகோணலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியில் பெருளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி காரணமாக போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நகருக்குள் வந்த பேரணியானது வாவிக்கரை வீதியுடாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் வரையில் சென்று காரியாலயத்திற்கு முன்பாக கோசங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய நிலையினை உணர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவினை விலக்கிக்கொள்ளவேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டன.

ஊர்வலமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் நோக்கி செல்லும் நிலையில் காரியாலயத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

முற்றுகையிட்ட.சாணக்கியன்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More