
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முட்கிளுவை முள் குத்தி மூதாட்டி உயிரிழந்தார்
முட்கிளுவை மரத்தின் முள் குத்தியதால் ஏற்பட்ட காயத்தால் மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியைச் சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்தவராவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற அவருக்கு காலில் முட்கிளுவை மரத்தின் முள் குத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட மூளாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (18) வியாழன் உயிரிழந்தார்.
முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)