மீண்டும் கியூ வரிசை

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மீண்டும் கியூ வரிசை

எரிபொருள் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் வெள்ளிக் கிழமையும் (02) மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடித்த வண்ணமுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்தறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்கு பெருந்தொகையானோர் எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததைக் காண முடிந்தது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலை குறைப்பும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் திடீரென பரவலாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களே காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஐம்பது வீத குறைந்தபட்சக் கையிருப்பைப் பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் எமது தேனாரம் செய்தியாளர் பல்வேறு பிரதேசங்களுக்கும் வெள்ளிக்கிழமை (02) நேரில் சென்று அவதானித்த போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற அறிவித்தல் பலகை தொங்க விடப்பட்டிருந்ததையும், சில நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட கியூ வரிசைகளில் மக்கள் காந்திருந்ததனையும் காண முடிந்தது.

மீண்டும் கியூ வரிசை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)