
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மின்சாரம் தாக்கியதால் சிப்பாய் உயிரிழந்தார்
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) புதன்காலை இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)