மாளிகைக்காடு மர ஆலையில் தீ விபத்து

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாளிகைக்காடு மர ஆலையில் தீ விபத்து

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்று தீப்பரவல் காரணமாக எரிந்துள்ளது.

இதனால் மர ஆலை கடுமையாக சேதமடைந்திருப்பதுடன் அங்கு இருந்த அறுக்கப்பட்ட மரங்கள், பலகைகள் பலவும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

அதேவேளை தகவல் அறிந்த கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுத்து உதவிய கல்முனை ஆணையாளர் என்.எம். நௌபீஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌசி, தேசிய நீர்வழங்கள் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம். முசாஜித் மற்றும் தீயணைப்புப் பிரிவின் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

மாளிகைக்காடு மர ஆலையில் தீ விபத்து

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)