
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவரின் எதிர்காலக் கல்வி தொடர்பான நடமாடும் சேவை
பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் இடை விலகல் தொடர்பான நடமாடும் சேவை கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் நடைபெற்றது.
இஸ்லாமாபாத் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று பாடசாலை செல்லும் மாணவர்கள் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதுடன், அவர்கள் கல்வியினை தொடர்வதில் உள்ள இடர்பாடுகளும் இதன்போது ஆராயப்பட்டன.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,பெண்கள் அபிவிருத்தி கள உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் , மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், முறைசாரா கல்வி நடவடிக்கைக்கு பொறுப்பான உத்தியோகத்தர், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)