
posted 8th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு விசேட அழைப்பு
மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு. அங்குள்ள இந்தியா வம்சாவளி தமிழர்களுடன், மூவின மக்களும் ஒன்றாக வாழ தான் முன்னெடுத்த வழிமுறைகள் குறித்தும், தனது தலைமைத்துவ பண்புகள் மற்றும் தொடர் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாட கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, இன்று (08) செந்தில் தொண்டமான் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)