மருமகன் தாக்கி மாமியார் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று (02) வியாழன் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தினார்.

இதனைத் தடுக்கச் சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டி.பி. அமராவதி (வயது - 60) என்ற பெண் பலியானதுடன், அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது - 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருமகன் தாக்கி மாமியார் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)