
posted 6th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவர் அர்ச்சுனாவின் பிணை மனு நிராகரிப்பு
மருத்துவர் அர்ச்சுனாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த மன்னார் நீதிவான் நீதிமன்றம் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பொது மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவரின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததுடன், அங்கிருந்த மருத்துவருடன் முரண்பட்டமை - ஒளிப்படம் எடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மருத்துவர் அர்ச்சுனா கடந்த சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அவரை நாளை புதன்கிழமை - 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்ட மருத்துவர் அர்ச்சுனா பிணை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த நகர்த்தல் பத்திரம்மீதான விசாரணை நேற்று (05) திங்கட்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது, மருத்துவர் அர்ச்சனாவின் பிணையை நிராகரித்த நீதிவான், அவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)