
posted 15th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத மடு அன்னையின் ஆவணி திருவிழா
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
அவா் மேலும் தொிவிக்கையில்;
வியாழக்கிழமை (15) மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெறும். வழமை போல் திருவிழா திருப்பலி 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு, ஆவணி திருவிழாவையொட்டி வழமை போல் போக்குவரத்து,பாதுகாப்பு,நீர் வசதிகள்,மின்சார வசதி,உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே இம்முறை திருவிழா திருப்பலி சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில், நானும், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.
ஏனைய மாவட்டங்களின் துறவிகள், அருட்பணியாளர்கள் இக்கூட்டு திருப்பலியில் கலந்து கொள்வார்கள்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும், அதனைத் தொடர்ந்தும் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்படும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)