
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மயிலத்தமடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகை தந்தபோது, கொம்மாந்துறைப் பகுதியில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூகச் செயல்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிரான வழக்கு நேற்று முன்தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்குடன் தொடர்புடைய அனைவரும் மன்றுக்கு சமுகமளிக்காமையால் அடுத்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)