
posted 16th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்தார் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் 'பிரபஞ்சம்' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (15) திங்கள் காலை இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து மடு வலயகல்வி பணிப்பாளர், கருங்கண்டல் பாடசாலை அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி வசந்த் இணைந்து குறித்த ஸ்மார்ட் வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் வழங்கி வைத்ததோடு, புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் சஜித் பிரேமதாசாவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)