மன்னாரில் கடந்த இரு தினங்களில் (12,13.11.2021) 50 கொவிட் தொற்றாளர்கள்.

கடந்த இரு தினங்கள் அதாவது 12.11.2021, 13.11.2021 ஆகிய இரு தினங்கள் மன்னார் மாவட்டத்தில் 50 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

12.11.2021 அன்று 41 கொவிற் தொற்றாளர்களும், 13.11.2021 அன்று 09 கொவிற் தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தனது நாளாந்த கொவிற் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் 12 ந் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 41 கொவிற் தொற்றாளர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், நானாட்டானில் 07 நபர்களும், மன்னார் பொது வைத்தியசாலை. ஆடம்பன் வைத்தியசாலை ஆகியவற்றில் தலா 06 நபர்களும். வங்காலை வைத்தியசாலையில் 03 பேரும், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, பேசாலை வைத்தியசாலை ஆகியவற்றில் தலா 02 நபர்களும் முருங்கன், நானாட்டான் மற்றும் எருக்கலம்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒருவரும்.

13.11.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 09 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முருங்கன் வைத்தியசாலையில் 03 பேரும், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், மன்னார், நானாட்டான், எருக்கலம்பிட்டி மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் (நவம்பர்) மேற்கொள்ளப்பட்ட 1768 ஆன்டிஜென் பரிசோதனையிலும், 238 பி.சீ.ஆர். பரிசோதனையிலும் இது வரைக்கும் இந்த மாதம் (நவம்பர்) 292 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த இரு தினங்களில் (12,13.11.2021) 50 கொவிட் தொற்றாளர்கள்.

வாஸ் கூஞ்ஞ

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More