
posted 12th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் அகன்றெடுத்த ஆயுதக்கிடங்கு
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுதக்கிடங்கு அகழப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப் படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி - 56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ. ஏ. பி. சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணி நடைபெற்றது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே. ஜி. லக்மல் குமார, கல்லடி, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு ஆகிய பிரிவுகளின் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த அகழ்வுப் பணி நடைபெற்றதுடன், எடுக்கப்பட்ட வெடிபொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)