
posted 14th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மக்களை தவறாக வழிநடத்தும் சுயநலவாதிகள் - அமைச்சர் டக்ளஸ்
சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியதுடன் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு முழுபையாக விடுபடாத போதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிதுள்ளார்.
அதனடிப்படையில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பயணிப்பதன் ஊடாகவே ஓர் சுபிட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கெளதரிமுனை KN/68 கிராம அலுவலர் பிரிவின் வினாசியோடை கிரமத்தில் சிலோன் சீபூட் பார்ம் வரையறுக்கப்பட்ட தனியர் நிறுவனத்தினரால் 25 ஏக்கரில் சுமார் 1000 மல்லியன் ரூபா முதலீட்டில் அமையப்பெற்றுள்ள நவீன இறால் பண்ணையின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)