மக்களின் ஆசீருடனும், ஊழியர்களின் கண்ணீருடனும் வெளியேறிய வைத்தியர் அரச்சனா

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மக்களின் ஆசீருடனும், ஊழியர்களின் கண்ணீருடனும் வெளியேறிய வைத்தியர் அரச்சனா

சாவகச்சேரி மக்கள் கூடி ஆதார வைத்திய சாலையினை முற்றுகையிட்டு அத்தியட்சகர் டாக்டர் அர்ச்சனாவை உள்ளே இருங்கள் நாங்கள் உணவு கொண்டுவந்து தருவோம் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 7ஆம் திகதி இரவு கிட்டத்தட்ட 11.30மணியிலிருந்து தூக்கத்தையும் பாராது, சூழவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமையினையும் குழப்பாது மக்களுக்கான வைத்திய சேவையினைக் கேட்டு நின்றனர்.

வைத்தியரோ தன்னைக் கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று கேட்டதனை மறுத்து நியாயம் வேண்டும் என்று மக்கள் முன்னே கோரிக்கையினை விடுத்தார்.

இன்று திங்கள் கிழமை 8ஆம் திகதி காலையும் மக்களின் முற்றுகையும், பொலிஸ், இராணுவப் பாதுகாப்பும் இருந்து கொண்டிருக்கையிலே அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் அமைதியினைக் கடைப்பிடித்து தங்கள் ஆதங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையினில், அத்தியட்சகருக்கு பாராளுமன்றத்திலிருந்து அழைப்பு வந்ததிருந்ததனால் அவர் அங்கு போய் தனது நியாயத்தினை விளங்கப்படுத்தி தன் பக்கம் உள்ள உண்மையினை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கையில் மக்களின் கூட்டம் அவ் வைத்தியரை வெளியே விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டினில் ஆரவாரித்தனர்.

இந்நிலையினில் இடைநடுவினில் உள்ளவர்களுக்கு தனது நிலையினை விளங்கப்படுத்தியதன் மூலமாக, வைத்தியரை மக்களுக்கு நீங்கள் திரும்பி வந்து இந்த வைத்தியசாலையில் வேலையினைத் தொடர்வீர்கள் என்ற உத்தரவாதத்தினை கொடுக்கும் படியாக கேட்டுக்கொள்ளபட்டதற்கிணங்க அவ் வைத்தியர் தனது பக்க நியாயத்தினை மக்களுக்குச் சொல்லி மக்களின் அனுமதியுடன் கொழும்பிற்குப் பயணமானார்.

ஆனால், இத்தோடு இப் பிரச்சினை முடிவுற்றதென்று தோன்றவில்லை. வைத்தியர் வெளியேற்றம் தனது உண்மை நிலையினை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளாரா? தியாகமான கண்துடைப்பா? மீண்டும் வருவேன் என்று மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதினை வைத்தியர் காப்பாற்றுவாரா? நான் தோற்றுப் போனால், இனி வைத்தியராக வேலை செய்யமாட்டேன் என்றது - இங்கு மட்டுமா அல்லது எங்குமா?

பொறுத்திருந்து பார்போம் - எத்தனையோவற்றினைப் பொறுத்துவுட்டோம் - இதைமட்டும் பொறுக்கமாட்டோமா என்ன?