
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிஸாரை படம் எடுக்க முயன்ற இளைஞர் கைது
பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் படம் எடுக்க முயன்ற இளைஞரை தாம் கைது செய்துள்ளனர் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான காணியை வேறு ஒருவர் அடாத்தாக உரிமை கோரி வந்தார்.
இந்தநிலையில், காணி விவகாரம் தொடர்பில் தம்மை வன்முறை கும்பல் அச்சுறுத்தியதாக வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பான விசாரணையின்போது பொலிஸாருடன் முரண்பட்டார் என்று கூறி பெண் ஒருவர் நேற்று (31) செவ்வாய் இரவு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கைதான பெண்ணின் மகன் நேற்று இரவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து பொலிஸாரை அச்சுறுத்தும் விதமாக தனது கைபேசியில் படம் எடுக்க முயன்றார் என்றும் இதையடுத்தே தாம் அவரை கைது செய்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)