
posted 17th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிஸாரின் யுத்திய நடவடிக்கை மூலம் பலர் கைது
பருத்தித்துறை கடற்கரை பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட யுத்திய நடவடிக்கை மூலம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை(16) காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரங்களில் பொலிசார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து மோப்பநாய் சாகிதம் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமையான முறை நடந்து கொண்டவர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)