பொருளாதார நெருக்கடியால் தாங்கொணாத் துயருற்றோர் புலம்பெயர்வைத் தடுக்கும் இராணுவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னார் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்கும் முகமாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இலங்கை நாடு பூராகவும் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பெறமுடியாத நிலமை மற்றும் பொருட்களின் விலையேற்றம் அத்துடன் வருமானம் இன்மை போன்ற காரணத்தினால் மன்னார் பாக்குநீர் கடல் வழியாக இந்திய தமிழ் நாட்டுக்கு அகதிகளாக செல்வோர் ஆர்வம் காட்டி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனால் அரசுக்கு இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் எற்படும் நிலமை உருவாகாமல் இருக்கும் நோக்குடன் மன்னார் பகுதியில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் செல்வோரையும், போதைப் பொருட்கள் கடத்திச் வருவோரையும் தீவிரமாக கண்காணிப்பதிலும், அகதிகளாகச் செல்வோரை தடுத்து நிறுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அத்துடன் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோரை இனம் காட்டித் தருமாறும் மீனவ சமூகத்தையும் மற்றும் பொது மக்களையும் கடற்படையினர் நாடி நிற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியால் தாங்கொணாத் துயருற்றோர் புலம்பெயர்வைத் தடுக்கும் இராணுவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY