
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொன்சேகா-அமெ. தூதுவர் கொழும்பில் திடீர் சந்திப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)