
posted 31st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொதுநலவாயக் குழு - முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில், அழைக்கப்படும் பட்சத்தில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள Ms. Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்) தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான ஓர் உயர் மட்டக் குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பிரஸ்தாப ஜனாதிபதி தேர்தலைகக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை தாம் தேர்தல்கள் ஆணைக் குழுவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்குமுன்னதாக இந்தத் தேர்தலோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பயனுள்ள கருத்துப் பறிமாறல்களில் ஈடுபடுவதன் ஊடாக குறிப்பாக தேர்தல் காலத்தில் எதிர் நோக்கப்படும் சவால்கள் எவையெவை பற்றியும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது,அரசாங்க ஆளணி முறைகேடாக கையாளப்படக்கூடிய அபாயம் குறித்தும்,அரசாங்கத்தின் உடைமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்தும் தூதுக்குழுனரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து எழுந்துள்ள பொலிஸ் மாஅதிபர் விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)