
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொது வேட்பாளர் தோற்றால் அரசுடன் பேச முடியாதாம் - சுமந்திரன்
தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்த பின்னர், ஆட்சிப்பீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுகளை நடத்தமுடியாத நிலை ஏற்படும் இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவை. இதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் பொது வேட்பாளரை களமிறக்குவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றையதினம் (01) வியாழன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த கருத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)