பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

“ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண் சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது.

சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது இலட்சியங்களை கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான், சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள் தேவை என்கிறோம்.

சிறுபான்மையினரை கௌரவிக்கும் அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது மீட்கப்பட்டு, மக்களின் வாழ்க்கை சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஒளிக்கீற்றொன்று தென்பட்டு வருகின்றது. கடந்த காலங்களைப்போலின்றி அச்சங்கள், கஷ்டங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகளில் இருந்து நாம் மீட்சி பெற்றுள்ளோம். நாட்டின் தற்போதைய ஸ்திரமான சூழலால் மக்கள் நிம்மதியுடன் வாழத் தொடங்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாம் மகிழ்ச்சியாக பெருநாளைக் கொண்டாட இறைவனைப் பிரார்த்திப்போம். இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரவேண்டும் என நான் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More