புளியங்கூடல் ஆலயத்தில் பவுண் நகைகள் மாயம் - விசாரணை கோரி மக்கள் போராட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புளியங்கூடல் ஆலயத்தில் பவுண் நகைகள் மாயம் - விசாரணை கோரி மக்கள் போராட்டம்

ஊர்காவற்றுறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தில் இருந்த 60 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பணம் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணையை வலியுறுத்தி அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (12) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான மக்களின் பேரணி பிரதான வீதி வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர், ஆலய முகப்பில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “பிள்ளையாரின் நகை, பணம் திருடியவனை வீதிக்குக் கொண்டு வா” என்று கூறியவாறு சிதறு தேங்காய் அடித்தனர்.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள்:

ஆலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று நகை, பணப் பெட்டகத்தின் திறப்பு தொலைந்துவிட்டதாக ஆலய நிர்வாகத் தலைவர் சிலருக்குக் கூறியுள்ளார். எனினும், அது குறித்து உடனடியாக பொலிஸாருக்கோ அல்லது உபயகாரர்களுக்கோ தகவல் வழங்கவில்லை.

சில நாட்களின் பின்னர் பெட்டகத்திலிருந்த 60 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள், பணம் என்பவற்றை காணவில்லை என்று ஆலய தலைவர் கூறியுள்ளார்.

பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்படாமல் அதிலிருந்த நகைகளும், பணமும் எவ்வாறு காணாமல் போயின என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் தனக்கு தெரியாது என்று பதிலளித்துள்ளார் என்று தெரிவித்த போராட்டக்காரர்கள், நகைகளையும் பணத்தையும் ஆலய நிர்வாகத்தினரே திருடினர் என்று எமக்கு சந்தேகம் உள்ளது என்றும் கூறினர்.

மேலும், பெட்டகத்தின் திறப்பு காணாமல் போய்விட்டது என்று தெரிந்ததும் அனைவரையும் அழைத்து அவர்கள் முன்பாக பெட்டகத்தின் பூட்டை உடைத்து அதிலிருந்த நகைகளை வேறொரு பெட்டகத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை. இந்தக் களவு நிர்வாகத்துக்குத் தெரிந்தே இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. பொலிஸார் காலத்தை இழுத்தடிக்காமல் விசாரணை நடத்தி உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றனர்.

இந்த விடயம் குறித்து ஊர்காவற்றுறை பிரதேச செயலர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் கேட்டபோது, “அந்த ஆலயத்தில் நகை, பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

புளியங்கூடல் ஆலயத்தில் பவுண் நகைகள் மாயம் - விசாரணை கோரி மக்கள் போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)