
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு
புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் (25) வியாழக்கிழமை வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.
கலாநிதி சிதம்பரமோகன் அவர்களால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.
இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)