
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதிய மீன்பிடி சட்டத்துக்கு எதிராக சுவரொட்டிகள்
அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்புக்கெதிராக நேற்று முன் தினம் (17) புதன்கிழமை மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த சுவரொட்டியில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடிச் சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)