
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற யாழ். வம்சாவழிப் பெண்
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக இலங்கை தமிழரான - யாழ்ப்பாண வம்சாவழியை சேர்ந்த பெண்ணான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர், 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று முதல் வெளியாகின. இந்தத் தேர்தலில் தொழில்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இதில், தொழில் கட்சியின் சார்பில் உமா குமரன் ஸ்ராட்போர்ட் - பௌ (Stratford and Bow) தொகுதியில் போட்டியிட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உமா குமரனின் பெற்றோர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாவர். அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர்.
இதேநேரம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலை நாட்டமுடியும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வேன் என்றும் உமா குமரன் தனது பிரசாரத்தில் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை நடந்த பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 8 பேர் தமிழர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)