பாணுக்குள் குண்டு ஊசிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வாங்கிய பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை (27) குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.

அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே , பாண் ஒன்றினுள் மூன்று குண்டு ஊசிகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

பாணுக்குள் குண்டு ஊசிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)