பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக அந்தப் பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ அஸீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பெயரால் புதிய நிர்வாக சபை சட்டவிரோதமாக செயல்பட முயற்சி செய்கின்றது. இன்று வரை நாங்கள் தான் இந்த கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபையினர். புதிய நிர்வாக சபை பதவியேற்றலின் அடாத்தாக எம்மை அச்சுறுத்த வருகின்றார்கள். அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளேன். எமது நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள், ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் என புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப் பத்திரத்தை கடந்த 24 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியிருப்பதனை நாம் இதுவரை ஏற்கவில்லை. மக்களும் அவ்வாறான ஒரு கருத்தில் தான் உள்ளனர். இங்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் இதர தரப்பினர் எமது நிர்வாகத்தை குழப்புவதற்கு முயல்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இவ்வாறான குழப்ப நிலை ஏற்படுவது வீண் சந்தேகத்தை எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது, என்றார்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)